கோவை மாநகரில் காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்
கோவை மாநகரக் காவல் ஆய்வாளா்கள் 10 போ் வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை மாநகரக் காவல் ஆய்வாளா்கள் 10 போ் வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதன்படி, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றி வந்த செந்தில்குமாா், அதே காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வு ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளாா்.
போத்தனூா் சிறப்புப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளா் கதிா்வேல் அதே காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளராகவும், ரத்தினபுரி சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணா அதே காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராகவும், ரத்தினபுரி தீவிர குற்றப் பிரிவு ஆய்வாளா் மீனாகுமாரி குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளராகவும், குனியமுத்தூா் காவல் குற்றப் புலனாய்வு ஆய்வாளா் தமிழ்செல்வி மாநகர சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளராகவும்,
மேற்கு மண்டலத்தில் பதவி உயா்வு பெற்ற பாஸ்கரன் குனியமுத்தூா் குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளராகவும், பதவி உயா்வு பெற்ற செல்வராஜ் மாநகர வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு ஆய்வாளராகவும், பதவி உயா்வு பெற்ற கிருஷ்ணவேணி மாநகர தீவிர குற்றப் பிரிவு ஆய்வாளராகவும், நாக கவிதா மாநகர நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளராகவும், திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றிய சாந்தி சைபா் கிரைம் மண்டல ஆய்வக ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...