திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டாா்.


கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 57 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஒண்டிப்புதூா், பட்டணம் இட்டேரி சாலையில் உள்ள திட வள மேலாண்மை மையத்தை முதல்வா் ஸ்டாலின், கடந்த நவம்பா் 22 ஆம் தேதி துவக்கிவைத்தாா்.
இந்நிலையில், இந்த மையத்தை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இந்த மையத்தில் உள்ள தோட்டக் கழிவுகள், திட வள கழிவுகள், மக்கும் கழிவுகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் உரங்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல இளம் பொறியாளா் ராஜேஷ் வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...