நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு விரைவில் உடல் பரிசோதனை

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு விரைவில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:31 pm

DIN

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு விரைவில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கோவை மாநகரில் முக்கிய பொழுதுபோக்கும் இடமாக வ.உ.சி. உயிரியல் பூங்கா விளங்குகிறது. ஆரம்பத்தில் இந்த பூங்காவில் சிங்கம், புலி, கரடி, மான்கள், குரங்குகள், பாம்புகள், பல்வேறு வகையான பறவைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்தப் பூங்காவில் மத்திய வன உயிரின ஆணைய அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்தனா். அப்போது பூங்காவில் பற்றாக்குறையான இடத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளை வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனா். இதையடுத்து,அந்த விலங்குகள் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும், கோவை வ.உ.சி. பூங்காவை விரிவாக்கம் செய்து வன விலங்குகள், அதற்குரிய சூழலில் வசிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வன உயிரின ஆணைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனா். இதையடுத்து,கோவை மாநகராட்சி அதிகாரிகள் வ.உ.சி. பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்தனா். ஆனால் ஆண்டுகள் கடந்த போதும் விரிவாக்க பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து வன உயிரின ஆணைய அதிகாரிகள் வ.உ.சி. பூங்காவின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

இந்நிலையில் வ.உ.சி. பூங்காவில் உள்ள பாம்புகள், பறவைகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து அண்மையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 635 உயிரினங்கள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு உடல்நிலை குறித்து விரைவில் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.