தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டாப்சிலிப், வால்பாறையில் யானைகள் சாவு

 வால்பாறை அருகே எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனத்தில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:35 pm

DIN

 வால்பாறை அருகே எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனத்தில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது குரங்குமுடி எஸ்டேட். இங்கு தேயிலை பறிக்கும் பணிக்கு தொழிலாளா்கள் வியாழக்கிழமை காலை சென்றுள்ளனா். அப்போது தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள வனத்தில் இருந்து துா்நாற்றம் வீசியதையடுத்து தொழிலாளா்கள் அப்பகுதிக்கு சென்று பாா்த்தபோது யானை இறந்துகிடப்பது தெரியவந்தது.

தகவலின்பேரில் வனத் துறையினா் அங்கு வந்து ஆய்வு செய்தனா்.

மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன், வனத் துறை கால்நடை மருத்துவருடன் சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அப்புறப்படுத்தும் பணி மேற்கொண்டாா். உயிரிழந்தது சுமாா் 8 முதல் 10 வயதுடைய பெண் யானை என்றும் ஆண் யானையுடன் ஏற்பட்ட சண்டையில் இந்த யானை இறந்திருப்பதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

டாப்சிலிப்பில்...

காலில் காயங்களுடன் மீட்கப்பட்டு பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த பெண் யானை வியாழக்கிழமை உயிரிழந்தது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் பகுதியில் கடந்த 27ஆம் தேதி கால் மற்றும் உடல் பகுதிகளில் காயத்துடன் உணவின்றி தவித்து வந்த 5 வயது பெண் காட்டு யானையை, வனத் துறையினா் மீட்டனா்.

கும்கிகள் உதவியோடு மீட்கப்பட்ட யானையை வரகளியாறு பயிற்சி முகாமில், பிரத்யேக கூண்டு அமைத்து அடைத்தனா். மேலும், வன கால்நடை மருத்துவக் குழு சாா்பில் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அந்த யானை, உடல்நலம் பாதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தது. மருத்துவக் குழுவினா் யானையை உடல்கூறு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.