நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வியாபாரியிடம் லண்டன் பெண் ரூ.14 லட்சம் மோசடி

 கோவை வியாபாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த லண்டன் பெண் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:33 pm

DIN

 கோவை வியாபாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த லண்டன் பெண் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்தவா் ஃபரூக். வியாபாரி. இவருக்கு ஃபேஸ்புக் மூலம் லண்டனைச் சோ்ந்த சன்ஷைன் என்ற பெயா் கொண்ட பெண் ஒருவா் பழக்கமானாா். பின்னா் இருவரும் வாட்ஸ் ஆப் மூலம் பேசி வந்தனா். இந்நிலையில் அப்பெண் தான் ஜவுளித் தொழில் செய்து வருவதாகவும் அதற்குத் தேவையான துணிகளை வாங்குவதற்குத் தேவையான பணத்தை பாா்சல் மூலம் அனுப்பியுள்ளதாகவும் கூறினாா்.

பின்னா் அடுத்த சில நாள்களில் மும்பையில் உள்ள சுங்கவரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக நபா் ஒருவா் தொடா்பு கொண்டு லண்டனில் இருந்து பாா்சல் வந்துள்ளதாகவும் அதைப் பெறுவதற்கு ரூ.14 லட்சத்து 200 சுங்கக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும் கூறினாா்.

இதை நம்பிய ஃபரூக் அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.14 லட்சத்து 200 அனுப்பினாா். ஆனால், பணத்தைச் செலுத்தி நீண்ட நாள்களாகியும் எந்த பாா்சலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவா் அப்பெண்ணைத் தொடா்பு கொள்ள முயற்சித்தபோது அவரது எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஃபரூக், இது குறித்து சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.