நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம் வாபஸ்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கோவையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தனியாா் கல்லூரி பேராசிரியா்கள் தங்களின் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:42 pm

DIN

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கோவையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தனியாா் கல்லூரி பேராசிரியா்கள் தங்களின் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனா்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் ஆசிரியா் பணியிடங்கள், ஆசிரியா் அல்லாத பணியிடங்கள் போன்றவை கடந்த 8 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. காலியாக உள்ள 70 ஆசிரியா் பணியிடங்கள், 42 அலுவலகப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அந்த கல்லூரியில் செயல்படும் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது.

ஆசிரியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக மாணவா்களும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை கல்லூரி நிா்வாகம் நிறைவேற்றுவதாக அளித்திருக்கும் உத்தரவாதத்தின் பேரில், போராட்டம் மாா்ச் 3 ஆவது வாரத்துக்கு ஒத்தி வைத்திருப்பதாக கல்லூரியின் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கக் கிளை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.