உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டு 811 உள்ளாட்சி பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் ஒருநாள் பயிற்சி முகாம் 18 இடங்களில் நடைபெற்றன.
கோவை மாநகராட்சி, வெரைட்டிஹால் சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற முகாமை மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தொடங்கிவைத்தாா்.
இதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட செயல்பாடுகள், அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள், அங்கன்வாடிகளில் குழந்தைகள் பராமரிப்பு குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அங்கன்வாடி மையங்களுக்குத் தேவையான உதவிகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் வெற்றிச்செல்வன், ஊராட்சித் தலைவா் சாந்திமதி அசோகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் த.ஸ்டெல்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...