மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவை அருகே வாயில் காயமடைந்த 10 வயது பெண் யானை உயிரிழப்பு

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிக்கண்டி கிராமத்திற்கு அருகில் 10 வயது பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News image
Updated On :24 மார்ச் 2022, 12:15 pm

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிக்கண்டி கிராமத்திற்கு அருகில் வாயில் காயமடைந்த 10 வயது பெண் யானை வனத்துறையினர்  தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று பலியானது.

வாயில் காயம் ஏற்பட்டு, உணவருந்தாமல், கடந்த 20-ம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், இன்று காலை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த 3 வாரங்களுக்கு மேலாக உணவு உட்கொள்ளாமல் சுற்றித்திரிந்து வந்தால், யானை இன்று உயிரிழந்தது.

யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டது குறித்து வனத்துறை மருத்துவர் குழு, யானையின் வாய் பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். மேலும் யானைக்கு வனத்துறை மருத்துவர் குழு என 50-க்கு மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இருப்பினும், யானை உடல் நிலை மிகவும் மோசமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.