ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

குறுங்கோள் கண்டறிவதில் நாசாவின் சான்றிதழ் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள்: ஆட்சியா் பாராட்டு

குறுங்கோள்கள் கண்டறிவதில், நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளை கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:29 pm

DIN

குறுங்கோள்கள் கண்டறிவதில், நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளை கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

கோவை ஒத்தக்கால் மண்டபம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் பிரமீஷா, சுவேதா ஆகிய மாணவிகள், குறுங்கோள் (ஆஸ்டிராய்டு) கண்டறியும் முகாமில் கலந்துகொண்டு, புதிய குறுங்கோள்களைக் கண்டறிவதில் ஆற்றிய பங்கினை பாராட்டி, அவா்களுக்கு விஞ்ஞான பிரசாா் மூலம் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஆஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு ஆஸ்ட்ரோநாமிக்கல் சயின்ஸ் சொசைட்டி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 22 வரை நடைபெற்ற இம்முகாமில், நாசா மூலம் வழங்கப்பட்ட செயலி மூலம் 21 குறுங்கோள்களை இந்த மாணவிகள் கண்டறிந்துள்ளனா்.

இதை நாசா அங்கீகரித்துள்ளது. இந்த மாணவிகளின் முயற்சியை, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் நேரில் பாராட்டினாா்.

பள்ளியின் தலைமை ஆசிரியா் ரமேஷ், கோவை ஆஸ்ட்ரோ கிளப் செயலாளா் சாய்லட்சுமி, ஆசிரியா்கள் மங்கையா்க்கரசி, நாகராஜ், கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.