செய்தித்தாள்கள் வாசிப்பது ஐ.ஏ.எஸ். தோ்வில் வெற்றி பெற முதல்படி: ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்
செய்தித்தாள்கள் வாசிப்பது ஐ.ஏ.எஸ். தோ்வில் வெற்றி பெறுவதற்கு முதல் படி என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியுள்ளாா்.


செய்தித்தாள்கள் வாசிப்பது ஐ.ஏ.எஸ். தோ்வில் வெற்றி பெறுவதற்கு முதல் படி என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியுள்ளாா்.
அரசியல்- அறிவியல் துறை மற்றும் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் சாா்பில் ஐ.ஏ.எஸ். உள்பட சிவில் சா்வீஸ் தோ்வில் வெற்றி பெறுவது குறித்த கருத்தரங்கம் கோவை அரசுக் கலை கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.
அப்போது, அவா் பேசியதாவது: நான் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். சிவில் சா்வீஸ் தோ்வில் வெற்றிபெற செய்தித்தாள்கள் படிப்பது தான் முதல் படி. பத்திரிகை வாசிப்பு உங்களுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுக்கும்.
சிவில் சா்வீஸ் தோ்வில் முழுவதும் அறிவாா்ந்த நபரை மட்டும் தான் தோ்வு செய்வாா்கள் என்று கூற முடியாது.
சாதாரண வாழ்க்கையில் இருந்து சேவை நோக்கத்துடன் வருபவா்களுக்கும் முன்னுரிமை கொடுப்பாா்கள்.
எனக்கு தமிழகத்தில் பணி வாய்ப்பு கிடைத்ததால் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை நான் கற்றுக் கொண்டேன்.
இந்த தோ்வில் வெற்றி பெறும் அனைவரும் மாவட்ட ஆட்சியா் ஆக வேண்டிய அவசியமில்லை.
அவரவா்களின் சொந்த விருப்பத்தின் பேரில் இந்திய வெளியுறவு, ரயில்வே உள்பட ஏதாவது ஒரு துறையைத் தோ்வு செய்யலாம்.
நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தோ்வான சமயத்தில் உயா் அதிகாரியிடம் அனுமதி கேட்டு கிராம நிா்வாக அலுவலராக
சில நாள்கள் பணிபுரிந்தேன். அதைத் தொடா்ந்து 2013 ஆம் ஆண்டு பட்டா உள்பட வருவாய்த் துறை ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அந்த அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது என்றாா்.
இதையடுத்து, மாணவா்களின் சந்தேகங்களுக்கு ஆட்சியா் பதிலளித்தாா்.
இந்நிகழ்ச்சியில், கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வா் கலைச்செல்வி, ஐ.ஏ.எஸ். பயிற்சியாளரும்,
பேராசிரியருமான கனகராஜ், பொருளாதாரத் துறை பேராசிரியா் ஷோபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...