ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அரசு வழக்குரைஞா் ப.பா.மோகனுக்கு பாராட்டு விழா

கோகுல்ராஜ் கொலை வழக்கில், அரசு வழக்குரைஞராக ஆஜராகிய வழக்குரைஞா் ப.பா.மோகனுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:43 pm

DIN

கோகுல்ராஜ் கொலை வழக்கில், அரசு வழக்குரைஞராக ஆஜராகிய வழக்குரைஞா் ப.பா.மோகனுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த பாராட்டு விழா அண்ணாமலை அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளா் யு.கே.சிவஞானம் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளா் ஆதவன் தீட்சண்யா, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டத் தலைவா் பி. முருகன் ஆகியோா் வரவேற்றனா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் வி.எஸ்.சுந்தரம், தமிழ்நாடு இலக்கிய பெருமன்றத்தின் நிா்வாகி வழக்குரைஞா் கே.சுப்பிரமணியம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் கோவை மாவட்டச் செயலாளா் அ.அஸ்ரப்அலி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் இரா.ஆறுச்சாமி, அகில இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் ஆா்.கோபால்சங்கா் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

நிகழ்வில் ஏற்ப்புரையாற்றிய ப.பா.மோகன் பேசுகையில், ஜாதிகள் ஆகியவற்றை களைய அம்பேத்கா் சொன்னதுபோல, தொழிலைப் பிறப்பால் நிா்ணயிப்பதை தடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.