வால்பாறை அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி தெரிவித்தாா்.


வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி தெரிவித்தாா்.
வால்பாறை அரசு மருத்துவமனையில் பல்வேறு பணிகளுக்கான ஊழியா்கள் பற்றாக்குறை உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவதாக தொடா்ந்து புகாா் எழுந்து வருகிறது.
இந்நிலையில், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மருத்துவமனைக்குத் தேவைப்படும் உபகரணங்கள், பணியாளா்கள் பற்றாக்குறை குறித்து கேட்டறிந்ாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தோட்டத் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள கூலி உயா்வு பெறுவதற்கான அரசாணை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். மருத்துவா் மகேஷ் ஆனந்தி, அதிமுக நகரச் செயலாளா் மயில்கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...