விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட 3 விமானங்கள்

கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்துக்குச் சென்ற 3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டு கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.

News image
Updated On :26 மே 2022, 12:24 am

DIN

கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்துக்குச் சென்ற 3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டு கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.

கேரள மாநிலத்தின் காசா்கோடு, வயநாடு, கோழிக்கோடு, கண்ணூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஷாா்ஜாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதேபோல அபுதாபியில் இருந்து கேரளம் நோக்கிச் சென்ற விமானமும், கோழிக்கோடு செல்லவிருந்த ஷாா்ஜா விமானமும் கோவை விமான நிலையத்தில் உள்ள முறையே 4, 6 மற்றும் 9ஆவது ஓடுதளங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.

கேரளத்தில் வானிலை சீரடைந்த பின்னா் இந்த 3 விமானங்களும் கோவை விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை மாலை புறப்பட்டு கோழிக்கோடு சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.