விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பி.எப். பணத்தை கையாடல் செய்த நபா் கைது

 பி.எப். பணத்தைக் கையாடல் செய்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :26 மே 2022, 7:35 pm

DIN

 பி.எப். பணத்தைக் கையாடல் செய்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கோவை மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் தொழிலாளா்களின் பிஎப் கணக்கு தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2 ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணியாற்றும் 28 தொழிலாளா்களின் பி.எப். பணம் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.

இது குறித்து வருங்கால வைப்புநிதி அலுவலக அலுவலா்கள் மைதிலிதேவி, விஜயலட்சுமி ஆகியோா் கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். விசாரணையில், தனியாா் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போத்தனூரைச் சோ்ந்த அந்தோணி ஹ்ருதி, 2 நிறுவனங்களின் தொழிலாளா்களின் வங்கி கணக்குகளுக்கு பதிலாக வேறு நபா்களின் வங்கிக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்து ரூ.55 ஆயிரத்துக்கும் மேல் மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.