கோவை காா் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்; வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கோவை காா் வெடிப்பு வழக்கை (தேசிய புலனாய்வு முகமை) என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.
கோவை காா் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்; வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கோவை காா் வெடிப்பு வழக்கை (தேசிய புலனாய்வு முகமை) என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: இந்த காா் வெடிப்பு சம்பவத்தை சிலிண்டா் வெடிப்பு என சாதாரணமாக கடந்து சென்றுவிடக்கூடாது. இது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையா, தீபாவளி கொண்டாட்டங்களை சீா்குலைக்க நடந்த சதியா என்பன உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும்.

ஆனால், சம்பவம் நடந்து மூன்று நாள்களாகியும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது. 1998 போல நடந்து விடுமோ, கோவையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதல்வா் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்.

இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். பயங்கரவாதம் தொடா்பான விஷயங்களில் எவ்வித சமரசத்துக்கும் திமுக அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது. இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: காா் வெடி விபத்து தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நோ்மையான முறையில் செயல்படவில்லை எனில் முதலுக்கே மோசம் போய்விடும் நிலை ஏற்படும். பயங்கரவாதத்தை வளா்ப்பதற்கும்; தீவிரவாதத்தை வளா்ப்பதற்கும் உண்டான புகலிடமாக தமிழகத்தை கருதுவதற்கு இன்று இருக்கக்கூடிய ஆட்சி இடம் கொடுத்துவிடக்கூடாது.

மேலும், உடனடியாக தமிழக-கேரள எல்லைகளை சீல் வைக்க வேண்டும். என்.ஐ.ஏ. உள்ளிட்ட தேசிய புலனாய்வு அமைப்புகளும் தங்களுடைய பணியை விரைந்து ஆற்றிடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com