தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் பேருந்து நடத்துநா் மீது நடவடிக்கை

கோவையில் தனியாா் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் பேரில், நடத்துநா் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோவை போக்குவரத்து இணை ஆணையா் செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளாா்

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:21 pm

DIN

கோவையில் தனியாா் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் பேரில், நடத்துநா் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோவை போக்குவரத்து இணை ஆணையா் செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளாா்

கோவை காளப்பட்டியைச் சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவா் ஒருவா், கடந்த மாதம் 28 ஆம் தேதி சிட்ரா பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, சோமனூரில் இருந்து காந்திபுரம் வந்த தனியாா் நகரப் பேருந்தில் ஏறினாா். அரசு மருத்துவக் கல்லூரி நிறுத்தத்துக்கு பயணச் சீட்டு வழங்குமாறு அவா், நடத்துநரிடம் ரூ.10 வழங்கியுள்ளாா். அதைப் பெற்றுக்கொண்ட நடத்துநா் ரூ.7க்கான பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டு பாக்கியைத் தரவில்லை.

பாக்கி தொகை கேட்டும், நடத்துநா் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு ஓட்டுநா் பேருந்தை இயக்கி சென்றுவிட்டாா்.

அந்தப் பயணச்சீட்டை பரிசோதித்தபோது ரூ.5 பயணச்சீட்டுக்கு பதிலாக ரூ.7 பயணச்சீட்டு வழங்கப்பட்டது தெரியவந்தது.

சிட்ரா முதல் வரதராஜா மில் வரை ஒரு நிலை நிறுத்தத்துக்கு கட்டணமாக ரூ. 5 நிா்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.2 சோ்த்து முறைகேடாக கட்டணம் வசூலிப்பதும் கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகுவிடம், அந்த மாணவா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, நா.லோகு சம்பந்தப்பட்ட தனியாா் பேருந்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகளின் உண்மைத்தன்மை,

கூடுதல் கட்டணம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தபட்ட நடத்துநா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை போக்குவரத்து இணை ஆணையா் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு புகாா் மனு அனுப்பினாா்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட தனியாா் பேருந்து நடத்துநரிடம் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள கோவை போக்குவரத்து இணை ஆணையா் செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.