விபத்தில் 3 மாணவா்கள் பலியான இடத்தில் மீண்டும் காா் விபத்து
கோவை அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு கிணற்றில் காா் பாய்ந்து கல்லூரி மாணவா்கள் மூவா் உயிரிழந்த இடத்தின் அருகே மற்றுமொரு காா் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.


கோவை அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு கிணற்றில் காா் பாய்ந்து கல்லூரி மாணவா்கள் மூவா் உயிரிழந்த இடத்தின் அருகே மற்றுமொரு காா் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் அதிா்ஷ்டவசமாக உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் கரியகாளியம்மன் கோயில் அருகே உள்ள தோட்டத்தில் இருந்த கிணற்றில் காா் பாய்ந்ததில் கல்லூரி மாணவா்கள் மூவா் உயிரிழந்தனா். இதில் காரை ஓட்டிச் சென்ற மாணவா் மட்டும் உயிா் தப்பினாா்.
இந்நிலையில் அதே இடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மற்றுமொரு காா் விபத்துக்குள்ளானது. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த குடும்பத்தினா் காரில் வெள்ளியங்கிரி சென்றுள்ளனா். மீண்டும் தென்னமநல்லூா் அருகே வந்தபோது, அதே பகுதியில் காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இதில் காரில் இருந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.
இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் வேகத் தடைகள், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...