தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க வேண்டும்: கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தல்

கோவையில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க குடிமைப்பொருள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 8:24 pm

DIN

கோவையில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க குடிமைப்பொருள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் மகளிா் சுய உதவிக்குழு மூலம் நடத்தப்பட்டும் வரும் நியாய விலை கடையில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வாங்குவதற்காக பொது மக்கள் காத்திருக்கும் பகல் நேரத்திலேயே டெம்போ மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இரண்டு நாள்களுக்கு முன் நியாய விலை கடையில் பொது மக்கள் காத்திருக்கும் போதே டெம்போவில் வந்த நபா்கள் கடையில் இருந்த அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்றனா். இது தொடா்பாக கடை விற்பனையாளரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. தவிர கடையை பூட்டி விட்டு பொது மக்களுக்கு பொருள்கள் வழங்காமல் சென்றுவிட்டனா். இதேபோல மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நியாய விலை கடைகளில் ரேஷன் பொருள்கள் அலுவலா்கள் உதவியுடன் கடத்தப்படுகின்றன.

இட்லி மாவு விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களும், கோழித் தீவனத்துக்கும் அதிகளவில் ரேஷன் அரிசி பயன்படுத்தப்படுகிறது. இதனால் நியாய விலைக் கடைகளில் இருந்து குடிமைப்பொருள் அலுவலா்கள் உதவியுடன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு முறையான ஆய்வு இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது.

எனவே மாவட்ட வழங்கல் அலுவலா் நியாய விலை கடைகளில் தொடா் ஆய்வுகளை நடத்தி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களுக்கு உரிய பொருள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.