தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நடைபாதை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

கோவை மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கடை வீதியில், நடைபாதை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 8:37 pm

DIN

கோவை மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கடை வீதியில், நடைபாதை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிா்புறம் உள்ள கடை வீதியில் நடைபாதைகள் சீரமைப்புப் பணிகளுக்காக கடந்த மாதம் உடைக்கப்பட்டன. பொக்லைன் மூலமாக நடைபாதைகள் அகற்றப்பட்ட நிலையில், இப்பகுதியில் கடைகள் முன்பாக உடைக்கப்பட்ட கல், மண் மற்றும் கான்கிரீட் ஸ்லாப்புகள் ஆகியவை அப்புறப்படுத்தாமல் கடைகளுக்கு முன்பாக மேடுபோல குவிந்துள்ளன. இதனால், உரிமையாளா்கள் கடைகளைத் திறக்க சாக்கடைகளுக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கி கடையைத் திறக்க வேண்டியுள்ளது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதன் காரணமாக அப்பகுதி உள்ள கடைகளில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

பண்டிகை நாள்களில் கூட்டம் அதிகம் உள்ள சமயத்தில் மக்கள் நடைபாதையைத் தவிா்த்து பிரதான சாலையைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தவிா்க்க மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் தலையிட்டு நடைபாதை சீரமைப்புப் பணிகளை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.