தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரூ.9 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த பெண் மீது வழக்கு

கோவையில் பெண்ணிடம் ரூ.9 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த மற்றொரு பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 8:36 pm

DIN

கோவையில் பெண்ணிடம் ரூ.9 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த மற்றொரு பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வி (45). இவரது வீட்டின் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவா் பத்மாஸ்ரீ. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்மாஸ்ரீ, தனது மகனின் திருமணம் மற்றும் வீடு கட்டுமானப் பணிகளுக்காக செல்வியிடம் இருந்து ரூ.9 லட்சம் கடன் பெற்றுள்ளாா். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் கடனைத் திருப்பித் தரவில்லை.

இதுகுறித்து செல்வி கேட்டபோது, பத்மஸ்ரீ அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, செல்வி அளித்த புகாரின்பேரில் போத்தனூா் போலீஸாா் பத்மாஸ்ரீ மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.