ஆன்மீகம் தான் தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது: தமிழிசை செளந்தரராஜன் (விடியோ)

கோவை பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி மற்றும் தேசிய சிந்தனை
ஆன்மீகம் தான் தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது: தமிழிசை செளந்தரராஜன் (விடியோ)

கோவை: கோவை பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி மற்றும் தேசிய சிந்தனை கழகம்(அகில பாரத பிரக்ஞா பிரவக்கின் தமிழக கிளை) இணைந்து நடத்தும் முப்பெரும் விழா(சுபகிருது ஆண்டு பிறப்பு, அம்பேத்கர் பிறந்தநாள், 75ம் ஆண்டு சுதந்திர தின பெருவிழா) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தெலங்கான ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், கெளமார மடாலயம்  குமரகுருபர அடிகளார் நிகழ்ச்சியுரை ஆற்றினர். 

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழிசை செளந்தரராஜன், அனைவருக்கும் தமிழ் வணக்கம் என கூறி உரையை துவக்கினார். அனைத்து ஊருக்கும் பேர் இருக்கும் பேருக்கே ஊராக இருப்பது பேரூர் என தெரிவித்தார். 

தமிழிடமிருந்து எங்கெல்லாம் அழைப்பு வருகிறதோ அங்கெல்லாம் தமிழிசை  வருவேன் எனவும் கூறினார். இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இங்கு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரும் தொண்டாற்றி வருவதாக அறிந்தேன். எனவே ஒரு ராமசாமி மட்டும் தமிழுக்கு சேவை செய்யவில்லை. பல ராமசாமிகள் சேவை செய்துள்ளதாக கூறினார். பெண்களை வளர்ச்சியை வைத்து தான் நாட்டின் வளர்ச்சியை குறிப்பிட முடியும் என சொன்னால் இங்கு ஆண்களுக்கு சமமாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். 75 ஆண்டு சுந்தந்திர தினத்தை ஓராண்டாக கொண்டாட உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.

தற்போது உள்ள இளைஞர்களுக்கு சுதந்திரம் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமர் இவ்வாறு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். சுந்ததிரத்திற்காக பல சுதந்திர வீரர்களை கண்டது இந்த தமிழ்நாடு எனவும் தெரிவித்தார்.  ஆண்மீகத்தை விடுத்து தமிழ் வளர்ச்சி கிடையாது என கூறிய அவர் ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது  எனவும் தெரிவித்தார். 

தமிழால் கோயில் கதவுகள் திறந்ததையும், தமிழால் கோயில் கதவுகள் மூடியதையும் நாம் பார்த்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழால் அனைத்தும் முடியும் என்பதை உணர்த்தியது மடங்கள் என தெரிவித்தார்.  ஆன்மீகம் இல்லாமல் தமிழ் கிடையாது. தமிழ் கிடையாமல் ஆன்மீகம் கிடையாது என்பதை உணர்த்தியது மடங்கள் எனவும் கூறினார்.  


காவி ஆன்மீகத்தை குறிக்கிறது என கூறிய அவர், ஆகவே தான் தமிழகத்தில் காவி பெரியதாகவும், வலிமையாகவும் உள்ளது எனவும் தெரிவித்தார். அதே சமயம் நான் தேசிய கொடியில் உள்ள காவியையும், அடிகளார்கள் அணிந்திருக்கும் காவியையும் தான் கூறுகிறேன் என்றும் விளக்கமளித்தார். என்னால் முடிந்த குழந்தைகள் கல்விக்கு தேவையான உதவியை செய்கிறேன். பண மதிப்பிழப்பு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களிடம் இருக்கும் பணமும் வெள்ளை, எங்கள் உடையும் வெள்ளை. நான் ஒரு சிறந்த அரசியல் வாதி என தெரிவித்தார்.  


மடாலயங்கள் மூலமாக நடத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு சிறப்பு கவனத்தை அரசு செலுத்த வேண்டும் என கோரிக்கை வைப்பதாகவும், அப்போது தான் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ முடியும் என தெரிவித்தார். ஆளுநர்கள் ஆளுமை மிக்கவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும், அதே சமயம் ஆளுநர்களும் மக்களில் ஒருவர் தான் என கூறிய அவர், சில நேரங்களில் கால சூழலினால் தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதினால் அனைத்திலும் தவறு செய்கிறார்கள் என முத்திரை குத்திவிட கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை செளந்தரராஜன்,

ஆதீனங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் மகளாக இங்கு வந்துள்ளதாகவும், இவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதாக வந்துள்ளதாகவும் கூறினார். தமிழக அரசு ஆன்மீக குருக்களை அழைத்து பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆன்மீக குருக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், அரசு இன்னும் பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

ஆளுநர்கள் என்றால் அவர்களும் மரியாதைக்கு உரியவர்கள்தான் தான் எனவும் கருத்து வேறுபாடு இருக்கின்றது என்பதற்காக ஆளுநர்களை அவமரியாதையாகவும், தரக்குறைவாக பேசுவதையும், நடத்துவதையும் மாற்றி கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், ஆளுநர்களுக்கு என  தனிப்பட்ட கருத்து என்று இருக்க முடியாது எனவும் கருத்து தெரிவித்தார். 

சில நேரங்களில் நீதிமன்றங்களில் சில வழக்குகளுக்கு சொல்லப்படும் கருத்துக்களை எல்லா ஆளுநர்களுக்கும் பொருத்தி பார்க்க முடியாது எனவும், ஆளுநர்கள் எல்லாரும் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் எனவும் கூறினார். தமிழக பிரச்னையை தான் பேசவில்லை எனக்கூறிய அவர், டீ சாப்பிட, மதிய, இரவு உணவு சாப்பிட கூப்பிட்டால் வர மாட்டேன் என சொல்லாமல் உட்கார்ந்து பேசினால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு எனவும், அமர்ந்து பேசி தீர்க்க பழகுவோம் எனவும் தெரிவித்தார். 

துணைவேந்தர்கள் நியனமத்தில் அனைவருடைய பங்கும் இருக்க வேண்டும் எனவும், அரசியல் சார்பு இருக்க கூடாது என்பதற்காகதான் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கின்றனர். தமிழக அரசுக்கு துணைவேந்தரை தேர்வு செய்வோம் என்று சொல்வதற்கு உரிமையுண்டு எனவும், அதே சமயம் ஆளுநருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு எனவும் அவர் தெரிவித்தார். 

ஆளுநர்களுக்கும், முதல்வர்களுக்கும் சுமூகமான உறவாக இருக்க வேண்டும் எனவும், ஆளுநர்களும் முதல்வர்களும் இணைந்து பணியாற்றும் போது மக்கள் பலன் பெறுவார்கள் என குறிப்பிட்ட அவர், எல்லாவற்றிக்கும் எதிர்வினை ஆற்றும் போது அது வருங்கால சந்த்திக்கு பலனளிக்காது எனவும் தெரிவித்தார். மசோதாக்களின் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு நேர, காலம் எதுவும் கிடையாது எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com