பொள்ளாச்சி, வால்பாறையில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
By DIN | Published On : 29th June 2022 06:08 PM | Last Updated : 29th June 2022 06:39 PM | அ+அ அ- |

கோவை: பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதையும் படிக்க: எப்போதுதான் வரும் தேர்வு முடிவுகள்? சிபிஎஸ்இ நிர்வாகம் மௌனம் கலைக்கலாமே?
இதையடுத்து பொள்ளாச்சி சுற்று வட்டாரம் மற்றும் வால்பாறையில் மாலை முதல் மழை பெய்து வருவதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் வால்பாறை செல்லும் வழியில் உள்ள கவர்க்கல் பகுதியில் பனி மூட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.