கோவை தடாகம் அருகே மளிகைக் கடை ஷட்டரை உடைத்து உணவு பொருள்களை சாப்பிட யானைகள் கூட்டம்
By DIN | Published On : 02nd May 2022 08:59 AM | Last Updated : 02nd May 2022 09:35 AM | அ+அ அ- |

கோவை: கோவை மாவட்டம், பெரிய தடாகம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 7 காட்டுயானைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி இன்று அதிகாலை தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன.
அதில், 3 யானைகள் மளிகைக் கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டன. தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்கள், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனிடையே, யானைகள் மளிகை கடை ஷட்டரை உடைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதை அப்பகுதி வாசிகள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...