கோவையில் தென்னிந்திய வீல்சேர் பேஸ்கெட் பால் போட்டி: தமிழக வீரர்கள் அசத்தல்

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வீல்சேர் பேஸ்கெட் பால் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் விளையாடி அசத்தினர்.
கோவையில் தென்னிந்திய வீல்சேர் பேஸ்கெட் பால் போட்டி: தமிழக வீரர்கள் அசத்தல்

கோவை: கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வீல்சேர் பேஸ்கெட் பால் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் விளையாடி அசத்தினர்.

விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி உள் விளையாட்டு மைதானத்தில் தென்னிந்திய அளவிலான வீல்சேர் பேஸ்கெட் பால் போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கனா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து பெண்கள் பிரிவில் 3 அணிகள், ஆண்கள் பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 9 அணிகள் பங்கேற்றனர். விறு விறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் தெலுங்கனா, தமிழ்நாடு அணியும் மோதி கொண்டதில் தமிழகம் முதலிடத்தையும், தெலுங்கனா இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

இதே போல பெண்கள் பிரிவில் தமிழகம், கர்நாடக அணி மோதியதில் கர்நாடக முதல் இடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் நடிகர் சதீஷ் கலந்து கொண்டு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் சதீஷ் மாற்றுத்திறனாளிகள் சிறு வயதில் இருந்து பல்வேறு காலகட்டங்களை கடந்து இம்மாதிரியான விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் தான் நிஜத்தில் ஹீரோ எனவும், தான் நடிக்கும் படங்களில் மாற்றுத்திறனாளியாக நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை கற்று கொண்டதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒளிந்திருக்கும் மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் வெளியில் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், அவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வீல்சேர் பேஸ்கெட் பால் போட்டிகள் நடைபெற்றதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு திடலை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு வீரர்களை அங்கீகரித்து வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com