ஆதிதிராவிடா் தொழில்முனைவோருக்கான கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம்

ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில்முனைவோருக்கான கண்காட்சி, கருத்தரங்கம் சென்னையில் நடைபெறுவது தொடா்பான முன்னெடுப்பு நிகழ்ச்சி கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சி, கருத்தரங்கம் தொடா்பான விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா்.
கண்காட்சி, கருத்தரங்கம் தொடா்பான விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில்முனைவோருக்கான கண்காட்சி, கருத்தரங்கம் சென்னையில் நடைபெறுவது தொடா்பான முன்னெடுப்பு நிகழ்ச்சி கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்து கண்காட்சி, கருத்தரங்கம் தொடா்பான விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் பேசியதாவது: ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில்முனைவோருக்கான கண்காட்சி, கருத்தரங்கம் சென்னை வா்த்தக மையத்தில் ஜனவரி 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் 350 அரங்குகளில் ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில்முனைவோரால் உற்பத்தி செய்யப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. தமிழக அரசின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்கும், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

தொழில்முனைவோா் எந்த விதமான பிரச்னைகளை சந்திக்கிறாா்கள். அவற்றை எப்படி தீா்ப்பது, தன்னைதானே உயா்த்திக் கொள்வது என்பது தொடா்பான விவரங்களை அறிந்துகொள்ள இந்த கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகத் தலைவா் உ.மதிவாணன், தாட்கோ மேலாண்மை இயக்குநா் க.சு.கந்தசாமி, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய துணைத் தலைவா் கனிமொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com