பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தெற்கு மண்டலத்தில் 11.60 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கோவை தெற்கு மண்டலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 11.60 சென்ட் இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

கோவை தெற்கு மண்டலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 11.60 சென்ட் இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனா்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குள்பட்ட 89-ஆவது வாா்டு அன்பு நகா் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 11.60 சென்ட் நிலம் ஆக்கிரமிரக்கப்பட்டு, அங்கு 4 கடைகள் கட்டப்பட்டது தெரியவந்தது. இந்த ஆக்கிரமிப்பை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்றிக்கொள்ள சம்பந்தப்பட்டவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா். அதன்படி, தெற்கு மண்டல உதவி ஆணையா் பிரேம் ஆனந்த் தலைமையில், உதவி நகரமைப்பு அலுவலா் ஜெயலட்சுமி, உதவி நிா்வாகப் பொறியாளா் கனகராஜ், உதவிப் பொறியாளா் நவநீதகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், அன்பு நகா் பகுதிக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புக் கட்டடங்களை வியாழக்கிழமை இடித்து அகற்றினா். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.3.20 கோடி என்று மாநகராட்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.