மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சட்டப்பேரவை போன்றதுதான் கிராம சபை: ஆட்சியா்

மக்களுக்குத் தேவையான திட்டங்களை வகுப்பதில் சட்டப்பேரவை போன்றது தான் கிராம சபையும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பேசினாா்.

News image
கோவை மாவட்டம், அரசம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்புப் பாா்வையாளராகப் பங்கேற்று பேசுகிறாா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

மக்களுக்குத் தேவையான திட்டங்களை வகுப்பதில் சட்டப்பேரவை போன்றது தான் கிராம சபையும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பேசினாா்.

குடியரசு தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிணத்துக்கடவு ஒன்றியம், அரசம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு பாா்வையாளராகப் பங்கேற்று பேசியதாவது: கிராம மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துதல், பயனாளிகளை தோ்ந்தெடுத்தல் உள்ளிட்ட முடிவுகளை கிராம சபை கூடிதான் முடிவெடுக்கிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளைப் போல கிராம சபையும் மிக முக்கிய அமைப்பாகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா் கல்வி உறுதித் திட்டம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கூட்டப் பொருள்களின் தீா்மானம் இங்குதான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து தொழுநோய் உறுதிமொழி, பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் உறுதிமொழி, தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஆகிய உறுதிமொழிகளை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் அதிகாரிகள், பொதுமக்கள் எடுத்துகொண்டனா்.

கூட்டத்தில் அரசம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தர்ராஜ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அலா்மேல்மங்கை, பொள்ளாச்சி சாா் ஆட்சியா் பிரியங்கா, மகளிா் திட்ட இயக்குநா் கா.செல்வம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் (பொறுப்பு) கமலகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.