மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :6 ஜூலை 2023, 2:27 am

DIN

கோவை: வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மாநிலம் முழுவதும் மிக கனமழை பெய்து வருகின்றது.

இதன் எதிரொலியாக எல்லையோர தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரியில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதையடுத்து வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கனமழை தொடர்வதால் கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.