கோவை - திருப்பதி ரயில் வாரத்துக்கு 4 நாள்களுக்கு நிரந்தரமாக இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை - திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட்டு வந்த ரயிலானது, வாரத்துக்கு 4 நாள்கள் நிரந்தரமாக இயக்கப்பட உள்ளது. அதன்படி, கோவை - திருப்பதி விரைவு ரயில் (எண்: 22616) செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.10 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள்களில் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும். திருப்பதி - கோவை ரயில் (எண்: 22615) திங்கள்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு திருப்பதியில் புறப்பட்டு, அதேநாள் இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது: நயினார் நாகேந்திரன்

துரந்தரில் சாரா அர்ஜுன் எப்படி தேர்வானார்?

”WhatsApp வதந்திகளை வாந்தியெடுக்கும் EPS” முதல்வர் விமர்சனம்

சமீர் ரிஸ்விக்கு தில்லி கேபிடல்ஸ் உதவிப் பயிற்சியாளர் பாராட்டு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

