அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய சமீர் ரிஸ்வியை தில்லி கேபிடல்ஸ் உதவிப் பயிற்சியாளர் இயான் பெல் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இளம் வீரர் சமீர் ரிஸ்வியின் அதிரடியான ஆட்டத்தால், நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், ஆடுகளத்தின் தன்மையை புரிந்துகொண்டு அதற்கேற்ப சமீர் ரிஸ்வி சிறப்பாக விளையாடியதாக தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் இயான் பெல் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தில்லி ஆடுகளத்தின் தன்மை சமீர் ரிஸ்விக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், போட்டியின்போது ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப அவர் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். நல்ல வீரர்கள் வெவ்வேறு ஆடுகளங்களில் விளையாடினாலும் அதற்கேற்ப சிறப்பாக செயல்படுவார்கள். மும்பைக்கு எதிரான போட்டியில் சமீர் ரிஸ்வி நம்பமுடியாத அளவுக்கு மிகவும் சிறப்பாக விளையாடினார்.
தில்லி கேபிடல்ஸ் அணியில் இளம் வீரர்கள் மட்டுமின்றி, மூத்த வீரர்களும் இருக்கிறார்கள். அணியில் இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் என சமபலத்துடன் இருக்கிறோம். கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் போன்ற மூத்த வீரர்கள் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இளம் வீரர்களில் சமீர் ரிஸ்வி நம்பமுடியாத அளவுக்கு சிறப்பான ஃபார்மில் உள்ளார் என்றார்.
மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய சமீர் ரிஸ்வி, 51 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Delhi Capitals assistant coach Ian Bell has praised Sameer Rizvi for playing an explosive innings and contributing to the team's victory.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமீர் ரிஸ்வி மீண்டும் அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 2-வது வெற்றி!

சூழலுக்கு ஏற்ப அற்புதமாக விளையாடிய சமீர் ரிஸ்வி; முன்னாள் கேப்டன் பாராட்டு!

நம்.4 இடத்தில் விளையாடியது தன்னம்பிக்கை அளித்தது: சமீர் ரிஸ்வி
சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


