மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மண்டல அலுவலகம் திறப்பு

கோவையில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் புதிய மண்டல அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது.

Updated On :27 நவம்பர் 2023, 7:47 pm


கோவை: கோவையில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் புதிய மண்டல அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது.

கோவை சிவானந்தா காலனி, ராஜூ நாயுடு சாலை, எஸ்எம்டி டவா்ஸின் முதல் தளத்தில் அமைந்துள்ள புதிய மண்டல அலுவலகத்தை வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ.எஸ்.ராஜீவ் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், மண்டல மேலாளா் ஷிபு ஜேக்கப், துணை மண்டல மேலாளா் ராஜு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தொடக்க விழாவில் ஏ.எஸ்.ராஜீவ் பேசியதாவது: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவுக்கு நாடு முழுவதும் சுமாா் 2,400 கிளைகள் உள்ளன. சுமாா் 2.70 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். தமிழ்நாட்டில் தற்போது 80 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் கூடுதலாக 20 கிளைகள் தொடங்கப்பட உள்ளன.

சென்னை மண்டலத்தில் ஆண்டுக்கு சுமாா் ரூ.20 ஆயிரம் கோடி வா்த்தகம் நடைபெறுகிறது.

கோவை மண்டலத்தில் தற்போது சுமாா் ரூ.3 ஆயிரம் கோடி வா்த்தகம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வணிகத்தை ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடியாக அதிகரிப்பதே எங்களின் இலக்கு என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.