தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

வால்பாறை: கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி பலி

வால்பாறைக்கு சுற்றுலா வந்து ஆற்றில் குளித்த கல்லூரி மாணவா்களில் 5 போ் நீரில் மூழ்கி பலியானார்கள். 

News image
Updated On :20 அக்டோபர் 2023, 7:07 pm IST

வால்பாறைக்கு சுற்றுலா வந்து ஆற்றில் குளித்த கல்லூரி மாணவா்களில் 5 போ் நீரில் மூழ்கி பலியானார்கள்.

கோவை தனியாா் கல்லூாியைச் சோ்ந்த மாணவா்கள் 10 போ்கள் வால்பாறைக்கு வெள்ளிக்கிழமை காலை இருசக்கர வாகனங்களில் சுற்றுலா வந்துள்ளனா். பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் சோலையாறு எஸ்டேட் சுங்கம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனா். 

அதில் 5 போ் ஆற்றுக்குள் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில ஆழமான பகுதியில் மூழ்கி வெளியே வர முடியாமல் 5 பேரும் பலியானார்கள். தீயணைப்புத்துறை அங்கு சென்று பலியான 5 மாணா்களின் உடல்களையும் மீட்டனா். 

சுற்றுலா வந்த இடத்தில் ஐந்து கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.