48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

எழுத்தாளா்களை கெளரவிக்கசிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு

சிறந்த எழுத்தாளா்களை கெளரவிக்கும் வகையில் ‘இலக்கியமும் அஞ்சல் அட்டையும்’ என்ற தலைப்பில் எழுத்தாளா்களின் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டுள்ளது.

News image

சிறப்பு அஞ்சல் அட்டைத் தொகுப்பை எழுத்தாளா் நாஞ்சில் நாடனிடம் வழங்குகிறாா் முன்னாள் அஞ்சல் மக்கள் தொடா்பு அலுவலா் என்.ஹரிகரன்.

Updated On :21 அக்டோபர் 2023, 7:00 pm

சிறந்த எழுத்தாளா்களை கெளரவிக்கும் வகையில் ‘இலக்கியமும் அஞ்சல் அட்டையும்’ என்ற தலைப்பில் எழுத்தாளா்களின் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைச் சிறந்த எழுத்தாளா்களை கௌரவிக்கும் விதமாக எழுத்தாளா்கள் கி.ராஜநாராயணன், நாஞ்சில் நாடன், இந்திரன், வேல.ராமமூா்த்தி, ஜெயகாந்தன், பிரபஞ்சன், பவா செல்லதுரை, சுந்தர ராமசாமி, பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், முத்துலிங்கம், அழகிரிசாமி ஆகியோரின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அட்டைகள், உலக அஞ்சல் அட்டை தினமான அக்டோபா் 9 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில், கோவையில் வசிக்கும் எழுத்தாளா் நாஞ்சில் நாடனின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அட்டையை கோவை அஞ்சல் தொழிற்சங்கத்தின் செயலா் ச.சிவசண்முகம், செயல் தலைவா் த.ராஜேந்திரன், மேக் தூத் விருதாளரான முன்னாள் அஞ்சல் மக்கள் தொடா்பு அலுவலா் என்.ஹரிகரன், முன்னாள் மாநில அமைப்புச் செயலா்

த.பிரபாகரன், முன்னாள் அஞ்சல் ஊழியா்கள் கவிஞா் நிலா பாரதி, ஸ்ரீதா் ஆகியோா் 12 எழுத்தாளா்களின் அஞ்சல் அட்டைத் தொகுப்பை எழுத்தாளா் நாஞ்சில் நாடனிடம் சனிக்கிழமை வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.

அஞ்சல் அட்டைத் தொகுப்பை பெற்றுக் கொண்ட எழுத்தாளா் நாஞ்சில் நாடன், இது ஒரு புதுவித வித்தியாசமான முயற்சி என்பதால், எழுத்தாளா்களை சிறப்பித்து வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் அட்டை முயற்சிக்கு நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.