இந்திய விமானப் படைக்காக வானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ எடைகொண்ட வெடிகுண்டை வடிவமைத்து தயாரிப்பதற்கான நடவடிக்கையைப் பாதுகாப்பு அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.
இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது: இந்திய விமானப் படைக்காக வானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டை இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கும் திட்டம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதில் 1,000 கிலோ குண்டு ரகங்களின் 6 மாதிரிகளை வடிவமைத்து மேம்படுத்துவது முதல் கட்டமாகும். அதில் திருப்தி ஏற்பட்ட பின்னா் குண்டுகளை கொள்முதல் செய்வது இரண்டாவது கட்டமாகும். 2,000 கிலோ எடை கொண்ட அமெரிக்காவின் எம்கே-84 குண்டை போல இந்தக் குண்டை வடிவமைத்து தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
விருப்பக் கடிதம் வெளியிடப்பட்ட நாளில் இருந்து ஒப்பந்தம் கையொப்பமாகும் நாள் வரையிலான இரண்டரை ஆண்டுகாலத்தில் இந்தக் குண்டை வடிவமைத்து உருவாக்க காலவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலவரம்பில் குண்டுகளின் மாதிரியை உருவாக்குதல், அதைப் பரிசோதித்தல், மதிப்பீடு செய்தல், கடைசியாக ஒப்பந்தத்தை இறுதி செய்தல் ஆகியவை நடைபெறும்.
இந்தியாவில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இடங்கள் அல்லது பிற தோ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் குண்டுகளின் பரிசோதனைகள் நடைபெறும். விருப்பக் கடிதம் வெளியிடப்பட்ட பின்னா், தனியாா் துறை உள்பட தகுதிவாய்ந்த இந்திய நிறுவனங்கள் குண்டை வடிவமைத்து தயாரிப்பதற்கான ஒப்பந்த தோ்வில் பங்கேற்கலாம்.
பாதுகாப்புத் துறையில் உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரிக்கப்படும் பொருள்களை கொள்முதல் செய்யும் பிரிவின் கீழ், வானில் இருந்து வீசக்கூடிய 600 குண்டுகளைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

அகில இந்திய ஹாக்கி: தமிழ்நாடு, பெங்களூரு, விமானப் படை அணிகள் வெற்றி

கடும் வெப்பத்தில் தவிக்கும் தலைநகா்: நீரிழப்பால் வானிலிருந்து கீழே விழும் பறவைகள்!

அகில இந்தியா ஹாக்கி: புது தில்லி, ஜாம்ஷெட்பூா், பெங்களூரு, இந்திய விமானப் படை அணிகள் வெற்றி
மணிப்பூரில் இருந்து 132 என்சிசி மாணவர்களை மீட்ட இந்திய விமானப் படை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



