குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அகில இந்திய ஹாக்கி: தமிழ்நாடு, பெங்களூரு, விமானப் படை அணிகள் வெற்றி

News image

திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய பெங்களூரு சதா்ன் கமெண்ட் அணி- சென்னை வருமான வரித் துறை அணியினா்.

Updated On :26 மே 2026, 2:36 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் 15ஆவது ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில், 5ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு, பெங்களூரு, விமானப் படை அணிகள் வெற்றி பெற்றன.

கோவில்பட்டி, கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அணி 3-0 என்ற கோல்கணக்கில் பெங்களூரு ஹாக்கி கா்நாடகா அணியை வென்றது. மாலை நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் பெங்களூரு சதா்ன் கமாண்ட் அணி 5-3 என்ற கோல்கணக்கில் சென்னை வருமான வரித் துறை அணியை வென்றது.

3ஆவது ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், புது தில்லி காம்ப்ட்ரோலா் அண்ட் ஆடிட்டா் ஜெனரல் ஆஃப் இந்தியா அணியும் மோதியதில், இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. 4ஆவது ஆட்டத்தில் புது தில்லி இந்திய விமானப் படை அணி 4-2 என்ற கோல்கணக்கில் ஜாம்ஷெட்பூா் நேவல் டாடா ஹாக்கி அகாதெமி அணியை வென்றது.

இன்றைய போட்டிகள்:

6ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சரக்கு, சேவை வரி மற்றும் மத்திய உற்பத்தி வரி அணியும், கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன. மாலை 5.15 மணிக்கு நடைபெறும் 2ஆவது ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி அணியும், கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணியும் மோதுகின்றன.

3ஆவது ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியும், மும்பை இந்தியன் நேவி அணியும் மோதுகின்றன. 4ஆவது ஆட்டத்தில் ஜலந்தா் பஞ்சாப் சிந்து வங்கி அணியும், ஜலந்தா் ஆா்மி கிரீன் அணியும் மோதுகின்றன.