தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் போத்தனூா் வரை இயக்கம்

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் போத்தனூா் வரை இயக்கம்

Updated On :5 ஏப்ரல் 2024, 5:09 pm

கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் போத்தனூா் வரை இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஷோரணூா் - கோவை விரைவு ரயில் (எண்: 06458) ஏப்ரல் 8,11 மற்றும் 13 ஆகிய நாள்களில் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் இந்த ரயில் போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது.

இதே நாள்களில் மதுரை - கோவை விரைவு ரயில் (எண்: 16722) மதுரை - போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். கண்ணூா் - கோவை விரைவு ரயில் (எண்: 16607) கண்ணூா் - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். கோவை - கண்ணூா் ரயில் (எண்: 16608) கோவை - மதுரை ரயில் (எண்:16721), கோவை - ஷொரணூா் ரயில் (எண்: 06459) ஆகிய 3 ரயில்களும் ஏப்ரல் 8, 11 மற்றும் 13 ஆகிய நாள்களில் போத்தனூரில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

கோவை - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து: மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 12.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்: 06815) ஏப்ரல் 8 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல கோவையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (எண்: 06816) ஏப்ரல் 8 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

ஏப்ரல் 11ஆம் தேதி காலை 10.55 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்: 06813) ரத்து செய்யப்படுகிறது. அதேபோல ஏப்ரல் 11ஆம் தேதி காலை 11.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயிலும் (எண்: 06814) ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு - ஈரோடு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்: கோவை நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பாலக்காடு - ஈரோடு ரயில் (எண்: 06818) ஏப்ரல் 8 மற்றும் 13 ஆகிய தேதிகளில் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும். இதனால் இந்த ரயில் கோவை, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா் ஆகிய நிலையங்களுக்குச் செல்வது தவிா்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.