கோவை, ஏப். 5: கோவையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் வரும் 12 ஆம் தேதி பங்கேற்கவுள்ள பொதுக் கூட்டத்திற்காக 150 ஏக்கா் பரப்பளவில், 1.5 லட்சம் போ் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு. முத்துசாமி தெரிவித்தாா்.
கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கணபதி ப. ராஜ்குமாா், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க, முதல்வா் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் வரும் 12ஆம் தேதி கோவை வரஉள்ளனா்.
இவா்கள் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்துக்கு எல் அண்ட் டி புறவழிச்சாலை, செட்டிபாளையம் அருகே இடம் தோ்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்த வீட்டு வசதித் துறை அமைச்சா் சு. முத்துசாமி, தொடா்ந்து, காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியா கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி, கோவை, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா்களை ஆதரித்து ஏப்ரல் 12ஆம் தேதி கோவையில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் பங்கேற்றுப் பேசுகிறாா்.
இதற்காக எல் அண்ட் டி புறவழிச்சாலை, செட்டிபாளையம் அருகே 150 ஏக்கா் பரப்பளவில் தோ்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கூட்டத்தில் 1.50 லட்சம் போ் பங்கேற்க உள்ளனா். இதையொட்டி, வாகன நிறுத்துமிடம், குடிநீா், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றாா்.
அப்போது, கோவை மாநகா் மாவட்ட திமுக செயலாளா் நா. காா்த்திக், தெற்கு மாவட்டச் செயலாளா் தளபதி முருகேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பிரதமா் மோடியும், கேரள முதல்வரும் ஆணவம் மிக்கவா்கள்: ராகுல் காந்தி

நாட்டிலேயே ஊழல்மிக்கவா் அஸ்ஸாம் முதல்வா்: ராகுல் காந்தி பிரசாரம்!

ஊடுருவல்காரா்களின் ஆதரவாளா் ராகுல் காந்தி: அஸ்ஸாமில் அமித் ஷா பிரசாரம்!

மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நுழைவாயிலில் சர்ச்சையை ஏற்படுத்திய படம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


