கோவை - ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில்

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோட்டிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பகத் கி கோட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 27ஆம் தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் பகத் கி கோட்டி - கோவை விரைவு ரயில் (எண்: 04811) நான்காவது நாள் காலை 9.30 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

கோவையில் இருந்து ஏப்ரல் 22 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் கோவை - பகத் கி கோட்டி சிறப்பு ரயில் (எண்: 04812) மூன்றாவது நாள் பகத் கி கோட்டி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கோட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், அகோலா, சூரத், வதோதரா, அகமதாபாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு மையங்கள் இன்று

2 மணி வரை மட்டுமே இயங்கும்

சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில்வே முன்பதிவு மையங்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் பண்டிகையையொட்டி, சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட முன்பதிவு மையங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவது போல வியாழக்கிழமை (ஏப். 11) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். எனவே, முன்பதிவு செய்யும் பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com