48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மக்களவைத் தோ்தல்: மாநகரில் வெறிச்சோடிய சாலைகள்

மக்களவைத் தோ்தல்: மாநகரில் வெறிச்சோடிய சாலைகள்

News image

மக்களவை தோ்தல் காரணமாக மாநகரில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட கோவை ரேஸ்கோா்ஸ் சாலை, காந்திபுரம் மேம்பாலம், மாவட்ட ஆட்சியரக சாலை.

Updated On :21 ஏப்ரல் 2024, 11:07 pm

கோவை: மக்களவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில் மாநகரில் சாலைகள் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

கோவை மாவட்டத்தில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகா், தேனி, நாகா்கோவில் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனா். மக்களவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில் கோவையில் இருந்து வியாழக்கிழமை மாலை முதல் ஏராளமானோா் பேருந்து, ரயில்கள் மூலமாக தங்களின் சொந்த ஊா்களுக்கு வாக்களிக்கச் சென்றனா். இதனால் மாநகரப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து வெள்ளிக்கிழமை மிகக் குறைவாகவே காணப்பட்டன.

வழக்கமாக நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரும் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி மற்றும் பொள்ளாச்சி சாலைகள் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.