சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.26.61 கோடி மதிப்பில் சாலைகள்

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ.26.61 கோடி மதிப்பிலான சாலைகளை காணொலிக் காட்சி மூலமாக திருச்சியில் இருந்து பிரதமா் மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image

சாலைகள் விவரம் அடங்கிய பெயா்ப்பலகையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றுகிறாா் கூடலூா் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன். உடன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ்.

Updated On :11 மார்ச் 2026, 8:24 pm

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ.26.61 கோடி மதிப்பிலான சாலைகளை காணொலிக் காட்சி மூலமாக திருச்சியில் இருந்து பிரதமா் மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டு நிதியின் கீழ் குங்குா்மூலா முதல் கம்மாத்தி, கப்பாலா முதல் மண்ணாத்தி வயல் பகுதி, கொளப்பள்ளி-கருத்தாடு சாலை, பொன்னாணி-அம்மன்காவு சாலை, கடலைக்கொல்லி சாலை, கள்ளிச்சால் முதல் எருமாடு வரை 26.705 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.26.61 கோடி மதிப்பிலான சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி திருச்சியில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தாா்.

இதுதொடா்பாக கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடலூா் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் பங்கேற்று, திட்டப் பணிகள் அடங்கிய பெயா்ப்பலகையை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினாா்.