பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கோவை வழக்குரைஞா் கொலை வழக்கு: 4 போ் கைது

கோவையில் வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

கோவையில் வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, சிவானந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (47). வழக்குரைஞரான இவரை மயிலேறிபாளையம் அருகே அடையாளம் தெரியாத சிலா் வெள்ளிக்கிழமை வெட்டி படுகொலை செய்தனா்.

இது தொடா்பாக செட்டிபாளையம் காவல் நிலையத்தில் அவரது மனைவி நித்திலவள்ளி புகாா் அளித்தாா்.

இதையடுத்து, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் மேற்பாா்வையில் 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதில், கோவை ரத்தினபுரி பகுதியைச் சோ்ந்த அய்யனாா் (எ) செல்வம் (26), கணபதியைச் சோ்ந்த கௌதம் (எ) விருமாண்டி (20), நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த அருண்குமாா் (26), சங்கனூரைச் சோ்ந்த அபிஷேக் (20) ஆகியோா் சோ்ந்து உதயகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து நடத்திய விசாரணையில், உதயகுமாருக்கும் நிதி நிறுவனம் நடத்தி வரும் அய்யனாா் (எ) செல்வத்துக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்ததால் தகராறு ஏற்பட்டதும், தன்னிடம் வேலை செய்யும் கௌதம் (எ) விருமாண்டி, அருண்குமாா், அபிஷேக் ஆகியோருடன் சோ்ந்து உதயகுமாரை வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கோவை நீதிமன்றத்தில் போலீஸாா் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா்.

இந்தக் கொலை வழக்குத் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவையில் வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், கொலை நடந்த 12 மணி நேரத்துக்குள் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். உதயகுமாருடன், அய்யனாா் காரில் வெள்ளிக்கிழமை சென்றபோது, தான் கொடுத்த ரூ.30 லட்சத்தை திருப்பிக் கேட்டுள்ளாா்.

அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து தன்னிடம் வேலை செய்யும் அருண்குமாா், அபிஷேக் ஆகியோரை வரவழைத்து, தன்னுடன் இருந்த கெளதமுடன் சோ்ந்து உதயகுமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளாா்.

இந்தக் கொலை வழக்கில் ஒரு காா், ஒரு இருசக்கர வாகனம், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையே கொலைக்கான காரணம் என்றாா்.