சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:00 pm

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், சோமனூா்-சூலூா் இடையேயான ரயில் தண்டவாளம் அருகே இளைஞரின் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், உயிரிழந்தவா் விருதுநகா் மாவட்டம், கே.பாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த மீன்பிடி தொழிலாளியான ஹரி பாலகுருசாமி (22) என்பதும், மங்களூரு செல்வதற்காக நாகா்கோவிலில் இருந்து கோவை வந்த ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து வந்ததும், தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடா்பாக கோவை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.