பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவையில் இருந்து வயநாட்டுக்கு ரூ.20 லட்சம் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு

கோவையில் இருந்து வயநாட்டுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.

News image
கோவையில் இருந்து வயநாட்டுக்கு நிவாரணப் பொருள்களை லாரி மூலம் அனுப்பிவைத்த மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன். உடன், மேயா் கே.ரங்கநாயகி உள்ளிட்டோா்.
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

கோவையில் இருந்து வயநாட்டுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமாகின. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆா்.எஸ்.புரம் 71-ஆவது வாா்டுக்குள்பட்ட மக்கள் சாா்பில் பிஸ்கட், தண்ணீா் பாட்டில்கள், துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வாகனம் மூலம் வயநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்தாா். மேயா் கே.ரங்கநாயகி, உதவி ஆணையா் சந்தியா, வாா்டு உறுப்பினா்கள் அழகு ஜெயபாலன் , நவீன்குமாா், உதவிப் பொறியாளா் கமலக்கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.