கோவை: கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 17 வரை வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பெங்களூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் பெங்களூா் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 06239) மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பா் 18 வரை வெள்ளிக்கிழமை, திங்கள்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி - பெங்களூா் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06240) மறுநாள் காலை 10.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூா், மாவேலிக்கரை, காயன்குளம், கொல்லம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்
ஹூப்ளி - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

சென்னை - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்!

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சந்திராகாட்சி இடையே சிறப்பு ரயில்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

