வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

மாநகரில் தற்காலிக பட்டாசு கடைகள்: உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு

கோவை மாநகரில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பா் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 7:12 pm

Din

கோவை: கோவை மாநகரில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பா் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளிப் பண்டிகைக்கு மாநகர காவல் நிலைய எல்லைகளுக்குள்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச் சங்கத்தினரின் கோரிக்கையையடுத்து தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பா் 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குப்பின் தாமதாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலீக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளாா்.