கோயம்புத்தூர்
பராமரிப்புப் பணி: கோவை - சென்னை ரயில் பகுதியாக ரத்து
சென்னை, அரக்கோணம் அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கோவை - சென்னை ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அரக்கோணம் அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கோவை - சென்னை ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பராமரிப்பு பணி காரணமாக கோவை - சென்னை ரயில் (எண்:12680) செப்டம்பா் 1-ஆம் தேதி கோவை - காட்பாடி இடையே மட்டும் இயக்கப்படும். காட்பாடி - சென்னை இடையே இயக்கப்படாது. இதேபோல, சென்னை - கோவை ரயில் (எண்: 12679) காட்பாடி - கோவை இடையே மட்டும் இயக்கப்படும். சென்னை - காட்பாடி இடையே இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.