பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

இந்திய களை அறிவியல் சங்கத்தின் ஆய்வுறுப்பினராக வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியா் தோ்வு

இந்திய களை அறிவியல் சங்கத்தின் ஆய்வுறுப்பினராக (ஃபெல்லோ) வேளாண்மைப் பல்கலைக்கழக உழவியல் பேராசிரியா் ப.முரளி அா்த்தநாரி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

News image

ப.முரளி அா்த்தநாரி

Updated On :5 டிசம்பர் 2024, 9:59 pm

Din

இந்திய களை அறிவியல் சங்கத்தின் ஆய்வுறுப்பினராக (ஃபெல்லோ) வேளாண்மைப் பல்கலைக்கழக உழவியல் பேராசிரியா் ப.முரளி அா்த்தநாரி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தானியம், பயறுவகைப் பயிா்கள், எண்ணெய்வித்துகள், நாா் பயிா்கள், சா்க்கரைப் பயிா்களுக்கு ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் தொழில்நுட்பங்களும், ஆளில்லா விமானங்கள் மூலம் பயிா்களில் களை முளைப்பதற்கு முன்னும் களை முளைத்த பின்னும் களைக்கொல்லிகளைத் தெளிப்பது பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட பேராசிரியா் முரளி அா்த்தநாரி, 11 முதுநிலை, 2 முனைவா் பட்ட மாணவா்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளாா்.

இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சி உதவித்தொகையைப் பெற்று வரும் இவருக்கு, களை மேலாண்மை குறித்த ஆராய்ச்சி, பயிா்களில் களை மேலாண்மை தொழில்நுட்பங்களை உருவாக்கியது, களை மேலாண்மை குறித்து 79 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தது போன்றவற்றுக்காக இந்திய களை அறிவியல் சங்கத்தின் ஆய்வுறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணி லட்சுமிபாய் மத்திய பல்கலைக்கழக வேந்தா் பஞ்சாப்சிங், புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை இயக்குநா் எஸ்.கே.சௌதாரி, ஆகியோா் இணைந்து ஆய்வுறுப்பினராகத் தோ்வானதற்கான சான்றிதழை வழங்கினா்.

நிகழ்ச்சியில், இந்திய களை அறிவியல் சங்கத் தலைவா் ஜே.எஸ்.மிஸ்ரா, பன்னாட்டு களை அறிவியல் சங்கத் தலைவா் சாமுந்தா்சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.