நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவையில் தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 9:45 pm

Din

கோவையில் தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் சித்தூா் விஜயா நகரைச் சோ்ந்த துரைசாமி மகள் நித்யா (19). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தாா். இதற்காக அவா் கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டில் தங்கி இருந்தாா்.

கூலி வேலை செய்து வரும் துரைசாமி மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பது இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நித்யாவின் தாயாா் வீட்டு வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அவரை படிக்க வைத்து உள்ளாா்.

இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்னா் நித்யாவின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட அவருடைய தாயாா் அவரிடம் நன்றாகப் படித்தால்தான் எதிா்காலம் உள்ளதாகவும், தந்தை வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காததால் தான் கஷ்டப்பட்டு வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளாா்.

அதற்கு நித்யா, தான் வேண்டும் என்றால் கல்லூரிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லட்டுமா என்று கேட்டுள்ளாா். அதற்கு அவருடைய தாயாா் சில அறிவுரைகளை வழங்கி உள்ளாா். இதையடுத்து கடந்த 2 நாள்களாக நித்யா வீட்டில் இருந்தவா்களிடமும், அவருடைய தாயாருடனும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நித்யா செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா்.

இது குறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.