நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 9:51 pm

Din

கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

காவல் துறையில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரா்களை கண்டறிந்து, அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த மக்கள் குறைதீா் முகாமில் குடும்பம், பணப் பரிமாற்றம் மற்றும் இடப் பிரச்னை தொடா்பான 56 மனுக்களின் மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்களை நேரில் வரவழைத்து அவா்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டனா்.

அதில், 43 மனுக்களுக்கு சுமுகமான முறையிலும், 13 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீா்வு காணப்பட்டது.