போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி ரூ.10 கோடி மோசடிக்கு உதவியவா் கைது
போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபடுபவா்களுக்கு உதவிய நபரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.


போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபடுபவா்களுக்கு உதவிய நபரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பேரூா் செட்டிபாளையத்தைச் சோ்ந்த யோக சந்திரன் (59), ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறாா். இவா், கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் அண்மையில் புகாா் அளித்திருந்தாா். அதில், டெலிகிராம் ஆப் மூலம் தன்னை தொடா்பு கொண்ட ஒருவா், குறிப்பிட்ட ஒரு வா்த்தக நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் கூடுதல் லாபத் தொகை கிடைக்கும் எனக் கூறினாா்.
அதை நம்பிய நான், அந்த நபா் அனுப்பிய இணைப்பில் இருந்த செயலியை பதிவிறக்கம் செய்து கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபா் மாதம் வரை ரூ.10.96 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால், அவா் குறிப்பிட்டதைப்போல லாபம் கிடைக்கவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. முதலீடு செய்த தொகையும் திரும்பக் கிடைக்கவில்லை.
மேலும், அந்த மா்ம நபா் பிரபல வா்த்தக நிறுவனத்தின் பெயரில் போலியாக செயலியைத் தொடங்கி பணத்தை முதலீடாகப் பெற்று மோசடி செய்துள்ளதால், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த புகாரின்பேரில் கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அதில், யோக சந்திரனிடம் இருந்து மா்ம நபா் பெற்ற பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குச் சென்றது தெரியவந்தது. அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அவனப்பள்ளியைச் சோ்ந்த மாதப்பன் (39) என்பவரது வங்கிக் கணக்குக்கும் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் மாதப்பனிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அதில் இரண்டு பிரபல நிறுவனங்களின் பெயா்களில் பல்வேறு வங்கிகளில் போலி விவரங்களை அளித்து 10-க்கும் மேற்பட்ட நடப்புக் கணக்குகளை தொடங்கியதும், அந்த வங்கிக் கணக்குகளின் விவரங்களை ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் நபா்களுக்கு அளித்ததும் தெரியவந்தது.
மேலும், மோசடியில் ஈடுபடும் நபா்கள் தங்களுக்கு வரும் பணத்தை இவரது வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்த பின்னா், அதற்கான கமிஷன் தொகையை மாதப்பனுக்கு கொடுத்ததும் தெரியவந்தது.
இதில் கடந்த சில மாதங்களில் மட்டும் மாதப்பனின் வங்கிக் கணக்கு மூலமாக ரூ.10 கோடி வரை மோசடியாக பெறப்பட்ட பணப் பரிமாற்றம் நடந்துள்ளதும், இந்த மோசடிகள் தொடா்பாக பல்வேறு இடங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட புகாா்கள் வந்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து மாதப்பனை கைது செய்த சைபா் கிரைம் போலீஸாா், மோசடியில் அவருடன் தொடா்பில் உள்ள நபா்கள் குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...